Homeசெய்திகள்ஆவடிரூ.3.50கோடியில் புதிய நகராட்சி கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ரூ.3.50கோடியில் புதிய நகராட்சி கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

-

ஆவடி அருகே 3.50கோடியில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். புதிய நகராட்சிக்கு புதிய கட்டிடம் என்கிற வகையில் அண்மையில் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருநின்றவூர் நகராட்சி தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது, போதிய இட வசதி இல்லாமல் அதிகாரிகளும் பணியாளர்களும் பணி செய்து வந்த நிலையில் கடந்தாண்டு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.

இந்த நிலையில் ரூபாய் 3 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளை கொண்டு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருநின்றவூர் நகராட்சியில் காணொளியை காண அமைக்கப்பட்டிருந்த காணொளியை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் அதிகாரிகளுடன் நேரலையில் கண்டனர் , பின்னர் புதிய நகராட்சி கட்டிடத்தை நாசர் குத்து விளக்கு ஏற்றி அறைகளை பார்வையிட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த வசதிகள் குறித்து கேட்டறிந்தார்..

MUST READ