Homeசெய்திகள்ஆவடிசிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரியில் தூய்மை பணி விழிப்புணர்வு

சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரியில் தூய்மை பணி விழிப்புணர்வு

-

ஆவடி அருகே 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரி தூய்மை பணிஆவடி அடுத்த பருத்திப்பட்டு 100 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ள பூங்கா ஏரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் மொய்தின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நகராட்சி இயக்குனர் சிவராசு ஐஏஎஸ் அவர்கள் கலந்துகொண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான பருத்திப்பட்டு ஏரியில் துவக்கி வைத்தார்.

இந்த தூய்மை பணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றி வில்லுப்பாட்டுகள் பாடி தூய்மைப்படுத்துவதைப் பற்றி விளக்கம் அளிக்கும் விதத்தில் நடித்து காட்டி பருத்திப்பட்டு பூங்காவிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.பின்பு ஏறினை சுற்றி மரக்கன்றுகளும் நட்டு வைத்தனர்.

சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரி தூய்மை பணிஇந்த பூங்காவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக ஆவடியின் முக்கிய போட்டிங் ஹவுஸ் இருப்பதால் அங்கு சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் தூய்மை பணிகளில் ஈடுபட்டது ,அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்த தூய்மை பணியில் ஆவடி மாநகராட்சி ஆய்வாளர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

MUST READ