Homeசெய்திகள்ஆவடிஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள்...

ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது

-

ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது. விரைவில் மீதமுள்ள நான்கு குற்றவாளிகளை கைது செய்வோம் ஆவடி காவல் ஆணையர் சங்கர் பேட்டி

ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது வீட்டின் கீழ் கிருஷ்ணா ஜூவல்லரிஸ் என்ற பெயரில் நகை கடை மற்றும் அடகு கடையை நடத்தி வருகிறார். கடந்த எப்ரல் மாதம் 15ம் தேதி மதியம் 12 மணியளவில் கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் புகுந்த வட மாநில வாலிபர்கள் பிரகாஷின் கை கால்களை கட்டி போட்டு கடையில் இருந்த 2.5 கிலோ தங்க நகைகள், பல கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்றனர்.

துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள்

பின்னர் பிரகாஷின் உறவினர் கடையின் ஷெட்டர் மூடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, கடையின் ஷெட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பிரகாஷ் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். மேலும் கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் எண் பதிவையும் போலீசார் கண்டுபிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள்

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 8 தனி படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி திருடர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சேட்டன் ராம் (25), தினேஷ்குமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட  அசோக் குமார், சுரேஷ் ஆகிய வட மாநில வாலிபர்களை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 705 கிராம் தங்க நகைகளையும், 4.3 கிலோ வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 4 வடமாநில வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..

ஆவடி காவல் ஆணையர் சங்கர்

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் செய்தியாளர்களை சந்தித்து இன்று (மே 03) பேசினார்.  8 தனிப்படை அமைத்து குற்றவாளிகள் தேடப்பட்டனர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக்குமார், சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 700 கிராம் தங்கம் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக கூறினார்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளை தேடி வருவதாக தெரிவித்தார். இவர்கள் இருவரும் சென்னையில் தங்கி இருந்ததாகவும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை கைது செய்துள்ளதாக கூறினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ஆணையர் சங்கர் தெரிவித்தார்.

இந்த குற்றவாளிகள் அனைவரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் அந்த மாநிலத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குற்றவாளிகளை கண்டுப் பிடித்ததாக சங்கர் தெரிவித்தார்.

மேலும் இதில் 2.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், அந்த நகைகளை பங்கிட்டு தப்பித்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடித்து மீதி நகைகளும் மீட்கப்படும் என்றார். பிடிப்பட்ட குற்றவாளிகள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

MUST READ