Homeசெய்திகள்ஆவடிபட்டாபிராம் துணை மின் நிலையத்தில் உயர் மின் பகிர்மான டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால்...

பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் உயர் மின் பகிர்மான டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பொதுமக்கள் அவதி

-

ஜெ ஜெயக்குமார் , பொதுச்செயலாளர் தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம், பட்டாபிராம்

இருளில் மூழ்கிய பட்டாபிராம் !

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உயர்மின் பகிர்மான நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் பகிர்மான நிலையத்தில்  16000 kvA உயரழுத்த ட்ரான்ஸ் பார்மரில் உள்ள ஆயிலில் மின் கசிவு காரணமாக திடீர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30000 க்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.

ஜெ ஜெயக்குமார் , பொதுச்செயலாளர் தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம், பட்டாபிராம்

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தியை அணைக்க கூடிய பணியில் ஈடுபட்டனர்.இருந்த போதிலும் டிரான்ஸ்பார்மரில் இருக்கக்கூடிய ஆயில் ஆனது தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்ததால் தீயை அணைப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது.தொடர்ந்து தீ கொளுந்து விட்டு மள மளவென எரிந்த சூழ்நிலையில், வான் உயர புகை எழுந்து குடியிருப்பு பகுதியில் சூழ்ந்ததால் பொது மக்களுக்கு கண் எரிச்சல்,மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

கட்டுக்குள் அடங்காத தீயை ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி மற்றும் ஆவடி மத்திய அரசுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட நிலையங்களிலிருந்து 30கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க கூடிய பணியில் 2 மணி நேரமாக ஈடுபட்டு போரடி  தீயை அணைத்தனர்.

ஜெ ஜெயக்குமார் , பொதுச்செயலாளர் தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம், பட்டாபிராம்

இந்த தீ விபத்து காரணமாக பட்டாபிராம், இந்து கல்லூரி, கோபாலபுரம்,சேக்காடு, தண்டுரை,கக்கன்ஜி நகர்,உள்ளிட்ட பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.

ஏற்கனவே தினம் தோறும் இரவு நேரங்களில் அறிவிக்கபடாத மின் வெட்டு நிலவி வரும் சூழலில்,இந்த தீ விபத்து காரணமாக இரண்டு மூன்று நாட்களுக்கு மின் வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஜெ ஜெயக்குமார் , பொதுச்செயலாளர் தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம், பட்டாபிராம்

மின் தடை காரணமாக முதியவர்கள், குழந்தைகள்,பெண்கள் என பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பட்டாபிராம் போலீசார், தீயணைப்பு அதிகாரிகள், மின்வாரிய துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி டிரான்ஸ்பார்மரில் இருந்து வெளிவரும் ஆயில் தீயை கட்டுக்குள் கொண்டு வர foam எனும் ரசாயனம் கலந்த நீரை பிழ்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்தில் அய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர்

இதனை தொடர்ந்து  சம்பவ இடத்தில் அய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர், இந்த சம்பவம் குறித்து மின்சார துறை அமைச்சரிடம் பேசி உள்ளதாகவும் விரைவில் டிரான்ஸ்பார்மர் மாற்றித் தருவதாக அமைச்சர் தெரிவித்ததாக கூறினார்.

சம்பவ இடத்தில் அய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர்

மேலும் மின் உயர் அதிகாரிகளிடம் பேசி புதிய ட்ரான்ஸ் பார்மர்கள் விரைவில் அமைத்திடவும்,பொது மக்களுக்கு தற்சமயம் மாற்று மின்சாரம் ஏற்படுத்தி தரவும்,விரைவில்  மின்சாரம் வழங்கிடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

MUST READ