Homeசெய்திகள்ஆவடிஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டி

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டி

-

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டிகள்.  பல்வேறு மாநில அணிகள் பங்கேற்பு. இளம் தலைமுறையினருக்கு முன் உதாரணமாக நடத்தப்பட்ட போட்டி.

ஆர்வமுடன் கலந்து கொண்டு கால்பந்தை அனல் தெறிக்க பறக்கவிட்ட 40 வயதை கடந்த ஆண்கள்

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டி

ஆவடி பட்டாபிராம் நியூ வெட்ரன்ஸ் கால்பந்து சங்கம் சார்பில், முதலாம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. 40 வயதிற்கு மேற்பட்டோர்க்கான கால்பந்து போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போட்டியாளர்கள் 12 அணிகளாக கலந்து கொண்டனர்.

பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.எப்.ஏ. மைதானத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில், மூன்றாவது நாளான இன்று பல அணிகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் பதக்கங்களும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டி

இதில் முதல் பரிசு சாய் சாக்கர் கிளப் அணியும், இரண்டாம் பரிசு பூவை மலர் வெட்ரன்ஸ் அணியும், மூன்றாம் பரிசு நீலகிரி வெட்ரன்ஸ் ஊட்டி அணியும் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

பட்டாபிராம் நியூ வெட்ரன்ஸ் கால்பந்து சங்கத்தின் விளையாட்டு வீரர் விளையாட்டு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரிவித்த 40 வயதை கடந்த ஆண்டோ கூறியது,

இளம் தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ளும் விதமாகவும், வாலிபர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டு வருவதற்கும் அதனை ஊக்குவிக்கும் விதமாகவும் தங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, வாலிபர்கள் செல்போன் கேம் அடிமையாகி மன உளைச்சலுக்கு ஆளாகாமல், மைதானத்தில் விளையாடி உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டி

மேலும் தங்கள் அணி பல்வேறு மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் விளையாடுவதற்கு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் கருதுவதாக தெரிவித்தார்.

பட்டாபிராம் பகுதியில் நடைபெற்ற இந்த அசத்தலாக கால்பந்து விளையாட்டை 40 வயதை கடந்த ஆண்கள் விளையாடி அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் இறுதியில் விளையாட்டு வீரர் ஒருவரின் பிறந்தநாளை அனைவரும் பிறந்தநாள் பாட்டு பாடி கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

MUST READ