Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே ஏல சீட்டு நடத்தி பண மோசடி செய்த தம்பதியர் கைது

ஆவடி அருகே ஏல சீட்டு நடத்தி பண மோசடி செய்த தம்பதியர் கைது

-

சென்னை, கோவூர், ராதாபாய் நகரைச் சேர்ந்தவர் அபிதா பாரூக்  இவர், முகலிவாக்கம் சாலையில் மட்டன் மற்றும் சிக்கள் கடை நடத்தி வருகிறார்.அவர்கள் கடைக்கு, போரூர், மதனந்தபுரம், லட்சுமி அவென்யு சுப்பையா நகரைச் சேர்ந்த அனிதா மற்றும் மூர்த்தி, தம்பதியர் அடிக்கடி கறி வாங்க வந்துள்ளனர். இதனால், இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.அனிதா மற்றும் மூர்த்தி, தம்பதியர் அனிதா மூர்த்தி தம்பதியினர், ஏலச்சீட்டு, நகை பண்டு மற்றும் மகளிர் குழு குலுக்கல் சீட்டு நடத்தி வருவதாகவும் அதில் சேருங்கள் என அபிதா பாரூக் இடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அதன்பேரில், கடந்த 2019 ம் ஆண்டு இரண்டு ஏலச்சீட்டில் சேர்ந்த போது, ஏலச்சீட்டு பணத்தை முறையாக திருப்பி கொடுத்துள்ளனர். தொடர்ந்து, 2022 ம் ஆண்டு மார்ச், மே மாதங்களில் 3 மற்றும் ஒரு லட்சம் என தலா இரண்டு ஏலச்சீட்டில் அபிதா பாரூக் சேர்ந்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 2022 ம் ஆண்டில் தீபாவளி நகை பண்டு சீட்டு, மகளிர் குழு குலுக்கல் சீட்டு என மொத்தம் ரூ. 7,95,020 கட்டியுள்ளார். இந்நிலையில், அபிதா பாரூக் பணத்தை திருப்பி கேட்டபோது, பணத்தை தராமல் தாமதப்படுத்தி உள்ளனர்.

ஆவடி காவல் ஆணையர்

இதனால், சந்தேகம் அடைந்த அபிதா பரூக், அனிதா வீட்டிற்கு சென்று விசாரித்த போது, வீட்டை விற்று அனிதா –  மூர்த்தி தம்பதியர் தலைமறைவாகி விட்டனர்.இதேபோல், சுமார் 12 நபர்களிடம் ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு சீட்டு, குலுக்கல் சீட்டில் ரூ. 36,67,710/- ஐ திருப்பி தராமல் அனிதா –  மூர்த்தி தம்பதியர் ஏமாற்றியது தெரிய வந்தது.

இது குறித்து அபிதா பாரூக் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் சுபாஷினி, தலைமையில் தனிப்படை போலீசார், திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் தலைமறைவாக இருந்த அனிதா (41) மற்றும் அவரது கணவர் மூர்த்தி (47), இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ