Homeசெய்திகள்ஆவடிரூ.50 லட்சம் மதிப்பிலான நிலம் அபகரிப்பு : போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்த 3...

ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலம் அபகரிப்பு : போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்த 3 பேர் கைது !

-

- Advertisement -

Land Grabbing Fraud: Police Arrest Trio for Forging Documents to Seize Rs 50 Lakh Property

ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் கணவன், மனைவி உட்பட 3 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷியாமளா (70).   இவரது பெற்றோர் ஜெயராமன் மற்றும் சரஸ்வதி ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இவரது ஒரே சகோதரரான முரளி கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி காலமானார். திருமணமாகாத முரளி, வெள்ளானூர் பகுதியில் 2,621 சதுர அடி நிலத்தை காஜா மொய்தீன் என்பவரிடமிருந்து கிரையம் பெற்று அனுபவித்து வந்துள்ளார். முரளி காலமான நிலையில்,  அவருக்குச் சொந்தமான  அந்தச் சொத்துக்கு ஷியாமளாவுக்கு மட்டுமே முழு வாரிசு உரிமை உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவச் செலவுக்காக அந்த நிலத்தை விற்க ஷியாமளா முயன்றபோது,   முரளி போன்று ஆள்மாறாட்டம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் உஷா என்பவருக்கு நிலம் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உஷா, அவரது கணவர் குமார் மற்றும் நண்பர்கள் வெற்றிவேல், ஜெயகுமார், அசன் அலி ஆகியோர் சேர்ந்து ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்துள்ளது.

தமிழில் குடமுழுக்கு நடத்த சொன்னதற்காக தாக்குதல்.. புரோகிதர்கள் மீது ஆவடி கமிஷனர் ஆபிஸில் புகார்..

இதுகுறித்து ஷியாமளா அளித்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு நிலப்பிரச்சினை விசாரணைப் பிரிவு-I போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையாளர் டி. செந்தில் குமார் உத்தரவின் பேரில், காவல் இணை ஆணையாளர் ஆர். சிவக்குமார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துணை ஆணையாளர் பாலமுருகன் ஆகியோரின் மேற்பார்வையில், நிலப்பிரச்சினை விசாரணைப் பிரிவு-I காவல் ஆய்வாளர் பாலன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தொடர்புடைய ஆவடி தில்லை நகரைச் சேர்ந்த குமார் (35), அவரது மனைவி உஷா (35) மற்றும் ஆரிக்கமேட்டைச் சேர்ந்த வெற்றிவேல் (42) ஆகிய மூவரையும் போலீசார் இன்று (நவ. 23) கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

MUST READ