- Advertisement -
ஆவடியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்து கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகையுடன் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கும், தமிழிற்கும் எதிராக செயல்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். கையில் பதாகையுடன் சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து போரட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு வாழ்க, தமிழ் வாழ்க, ஆளுநர் ஒழிக என மாணவர்கள் முழக்கமிட்டனர். மாணவர்கள் போராட்டத்தால் சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.