ஆவடியில் இரு வழி தடங்களிலும் இன்று காலை ரயில் சேவை பாதிப்பு.
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளம் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து தாமதம் ! பயணிகள் அவதி!
ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் திடீர் 5 அடி பள்ளம் ஏற்பட்டதால் சென்னையில் இருந்து திருவள்ளூர் அரக்கோணம் மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்களும் அரக்கோணம் திருவள்ளூர் மார்க்கமாக சென்னைக்குச் செல்லும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
இதனால் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவ மாணவிகள் வேலைகளுக்குச் செல்லும் பொதுமக்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்களில் இருந்து இறங்கி பேருந்து பயணத்தை மேற்கொள்ள நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் துரிதமாக பள்ளத்தினை மூடும் பணியில் ஈடுபட்டு பள்ளத்தினை சீர் செய்தனர் இதன்பின் ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.இதனால் ஆவடி அண்ணனூர் இடையே ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து இரு மார்க்கமாகவும் தாமதம் ஏற்பட்டது.