Homeசெய்திகள்கிணறுக்குள் கிடந்த 17 கிலோ தங்க மூட்டை.. உடைந்த 1 வருட மர்மம்..!

கிணறுக்குள் கிடந்த 17 கிலோ தங்க மூட்டை.. உடைந்த 1 வருட மர்மம்..!

-

- Advertisement -

கர்நாடகாவில் 2024 ஆம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் ரூ. 13 கோடி மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் தாவெணகிரி நகரில் எஸ்பிஐ வங்கியில் இருந்து 2004 அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி 17.1 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விஜயகுமார் அஜய் குமார் , அபிஷேக், சந்துரு பரமானந்த் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் கிழக்கு மண்டல ஐஜி இது தொடர்பான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த நகைகளை ஒரு கிணற்றுக்குள் பதுக்கி வைத்திருந்தனர். இந்த தகவலை கர்நாடக கிழக்கு மண்டல ஐஜி தெரிவித்துள்ளார். விஜயகுமார், அஜய் குமார், பரமானந்தம் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அவர்கள் தாவெனகிரி பகுதியில் தங்கி இருந்து இதுபோன்ற பல்வேறு திருட்டு சம்பவங்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. மற்ற மூவரும் உள்ளூர்வாசிகள் என்றும் கூறப்படுகிறது.இந்த கொள்ளை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், சிசிடிவி கேமராக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு மிகவும் திட்டமிட்டு இந்த கொள்ளை நடத்தப்பட்டதாகவும் தற்போது இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

MUST READ