Homeசெய்திகள்பகவதி அம்மன் கோயில் பொங்கல் வைத்து வழிபாடு

பகவதி அம்மன் கோயில் பொங்கல் வைத்து வழிபாடு

-

உலகப் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயில் விழா, பொங்கல் வைத்து வழிபாடு

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு செய்ய லட்சக்கணக்கில் பெண்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் புகழ் பெற்ற விழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9வது நாள் பொங்கல் வழிபாடு நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான பொங்கல் திருவிழா பிப்ரவரி 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக் கோயிலில் பகவதி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு நடைபெறுவதை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது.

இதன் பின்னர் கோயிலை சுற்றியுள்ள 6 கிலோமீட்டர் சுற்றளவில் குவிந்திருக்கும் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடுவார்கள். பிற்பகல் 2.30 மணியளவில் பொங்கல் பானைகளில் நிவேத்தியம் செய்யப்படும்.

இங்கு பொங்கல் வழிபாடு செய்வதன் மூலம்

தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் பெண்கள் ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியைக் காண கேரளாவின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

MUST READ