Homeசெய்திகள்கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது!

கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது!

-

கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது!

திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டைச் சேர்ந்தவர் சகாயம். அவரது மகன் தினேஷ், 17, கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  தினேஷ், கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி திருவள்ளூர் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நத்தம்மேடு ஏரிக்கரையில் தினேஷ் மது அருந்தச் சென்றார். அப்போது, அங்கு ஏற்கனவே மது அருந்திக் கொண்டிருந்த இரண்டு மர்ம நபர்கள், தினேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் தலை, கைகளில் வெட்டி தப்பினர்.

கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது!

புகாரின்படி விசாரித்த திருநின்றவூர் போலீசார், ஆவடியைச் சேர்ந்த சதீஷ், 22 ; அரக்கோணத்தைச் சேர்ந்த திருமுருகன், 25, ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். வெட்டுப்பட்ட தினேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

MUST READ