spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமின்சார ரயில் மோதி +2 மாணவன் உயிரழப்பு

மின்சார ரயில் மோதி +2 மாணவன் உயிரழப்பு

-

- Advertisement -

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே  தண்டவாளத்தை கடக்க முயன்ற +2 மாணவன் மீது மின்சாரம் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மின்சாரம் ரயில் மோதி +2 மாணவன் உயிர்ழப்புதிருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது தஸ்லீம்   தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர் மூத்த மகன் முகமது குஸ் நசீப்(17)  திருவொற்றியூரில் தனியார் பள்ளியான மஹாவீர் ஜெயின் பள்ளியில் +2 படித்து வருகிறார். கடந்ந 8 தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை ம பள்ளி நண்பர்களுடன் விம்கோ நகர் பகுதியில் விளையாட்டு திடலில் கிரிக்கெட்  விளையாட சென்றுள்ளார்.

நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி முடித்து விட்டு இரவு வீட்டிற்கு செல்வதற்காக விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது  கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் மோதி முகமது குஸ் நசீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார்க்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ரயில்வே இருப்புப் பாதை போலீசார் சிறுவன் முகமது குஸ் நசீப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

we-r-hiring

அடையாளம் தெரியாததால் விசாரித்து நேற்று சிறுவனின் உறவினர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து  பிரேத ப‌ரிசோதனை‌ செய்து தந்தையிடம் மகனின் சடலத்தை போலீசார் ஒப்படைத்தனர். கவனக்குறைவால் தண்டவாளத்தை கடந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்!

MUST READ