- Advertisement -
ஓய்வுப்பெற்ற நீதிபதிகளை நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க பிற்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் தற்காலிக உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் காலியாக உள்ள 32% நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் நீதித்துறையில் நிரப்படாமல் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.