தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆணையாளர் மணிவண்ணன் மன்னார்குடி டிஎஸ்பியாகவும், சென்னை மத்திய குற்ற பிரிவில் பணியாற்றிய செல்வி.காவியா மணப்பாறை டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த பார்த்திபன், திட்டக்குடி டிஎஸ்பி ஆக மாற்றம் செய்தும், திருப்பத்தூர் டிஎஸ்பியாக பணியாற்றிய பாலகிருஷ்ணன் பென்னாகரம் டிஎஸ்பியாக மாற்றம் செய்தும், கிருஷ்ணகிரி அமலாக்க பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றிய மகாலட்சுமி வாணியம்பாடி டிஎஸ்பியாக மாற்றம் செய்தும், சேலம் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய லட்சுமணன் சேலம் ரயில்வே டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் காட்டூர் உதவி ஆணையராக பணியாற்றிய கணேஷ், திருப்பூர் மாநகர கொங்குநகர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர கொங்குநகர் உதவி ஆணையராக பணியாற்றிய வசந்த ராஜ், ஈரோடு பெருந்துறை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பெருந்துறை டிஎஸ்பியாக பணியாற்றிய கோகுலகிருஷ்ணன் கோயம்புத்தூர் மாநகர காட்டூர் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் உதவி ஆணையராக பணியாற்றிய ஆனந்த ஆரோக்கியராஜ் திருச்சி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணப்பாறை டிஎஸ்பியாக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் திருவாரூர் அமலாக்க பிரிவு டிஎஸ்பியாகவும், தஞ்சாவூர் டிஎஸ்பியாக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் சென்னை விஜிலென்ஸ் டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அவனியாபுரம் உதவி ஆணையராக பணியாற்றிய சீதாராமன் திருச்சி ஸ்ரீரங்கம் உதவி ஆணையராக மாற்றம் செய்தும், மன்னார்குடி டிஎஸ்பி பிரதீப் திருவாரூர் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பியாக இருந்த கலையரசன் கள்ளக்குறிச்சி அமலாக்க பிரிவு டிஎஸ்பியாகவும், திண்டுக்கல் டிஎஸ்பியாக இருந்த சிபி சாய் சௌந்தர்யன் மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த சங்கர் திண்டுக்கல் டிஎஸ்பியாகவும், மதுரை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் டிஎஸ்பியாக இருந்த சரவணன் ரவி திருப்பூர் மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி உதவி ஆணையராக பணியாற்றிய தர்ஷிகா நடராஜன் நாங்குநேரி டிஎஸ்பியாக மாற்றம் செய்தும், கன்னியாகுமரி டிஎஸ்பியாக பணியாற்றிய மகேஷ் குமார், கோயம்புத்தூர் சிபிசிஐடி டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி அமலாக்கப் பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றிய ஜெயச்சந்திரன் கன்னியாகுமரி டிஎஸ்பியாக மாற்றம் செய்தும், கோயம்புத்தூர் சிபிசிஐடி எஸ்பியாக பணியாற்றிய சரவணன் திருநெல்வேலி உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டிஎஸ்பியாக பணியாற்றிய பார்த்திபன் மானாமதுரை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் குற்ற ஆவண பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய சார்லஸ் கடலூர் அமலாக்க பிரிவு டிஎஸ்பியாகவும், பென்னாகரம் டிஎஸ்பியாக பணியாற்றிய சபாபதி சென்னை எழும்பூர் ரயில்வே டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகர அம்மாபேட்டை உதவி ஆணையராக பணியாற்றிய செல்வம் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்தும், திருச்சி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய பாஸ்கர் திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
விருதுநகர் குற்ற ஆவணப்பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய ராமகிருஷ்ணன் மதுரை மாநகர அவனியாபுரம் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றிய செந்தில்குமார் திருவண்ணாமலை மாவட்டம் அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்தும், மயிலாடுதுறை மாவட்டம் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய மனோகர் புதுக்கோட்டை ஆலங்குடி டிஎஸ்பியாக மாற்றம் செய்தும், தீவிரவாத தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய பண்டாராசுவாமி சென்னை காவல்துறை தலைமையிட டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருமங்கலம் உதவி ஆணையராக பணியாற்றிய பிரம்மானந்தன் திருச்சி விமான நிலைய குடியுரிமை டிஎஸ்பியாக மாற்றம் செய்தும், ராமநாதபுரம் கீழக்கரை டிஎஸ்பியாக பணியாற்றிய பாஸ்கரன் மதுரை அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்தும், திருப்பூர் காங்கேயம் டிஎஸ்பியாக பணியாற்றிய மாயவன் சென்னை மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட டிஎஸ்பியாக பணியாற்றிய பிரித்விராஜ் சௌகான் சேலம் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பியாகவும், ராமநாதபுரம் ராமேஸ்வரம் டிஎஸ்பியாக பணியாற்றிய சாந்தமூர்த்தி திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட பேரையூர் டிஎஸ்பியாக பணியாற்றிய துர்கா தேவி தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட டிஎஸ்பியாக பணியாற்றிய தேன்மொழிவேல் சேலம் மாநகர அம்மாபேட்டை உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்தும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி டிஎஸ்பியாக பணியாற்றிய கந்தன் திருவள்ளூர் மாவட்ட அமலாக்கபிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்று தமிழக முழுவதும் பணியாற்றும் 40 துணை கண்காணிப்பாளர்கள் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் மேற்கொள்ளவும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவில் தெரிவித்துள்ளார்.