spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் சினிமா பாணியில் ரூ.1.75 கோடி தங்கம் கடத்தல்... 3 பேரை கைது செய்த சுங்க...

சென்னையில் சினிமா பாணியில் ரூ.1.75 கோடி தங்கம் கடத்தல்… 3 பேரை கைது செய்த சுங்க அதிகாரிகள்!

-

- Advertisement -

சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணியில் நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் 

we-r-hiring

துபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடக்கப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை தனிப்படையினர் நேற்று, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் துபாயிலிருந்து இலங்கை வழியாக சென்னை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறையினர் ரகசியமாக கண்காணித்தபோது, அதில் சுமார் 28 வயது உடைய ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.

அந்தப் பயணியை தீவிரமாக கண்காணித்த போது, அவர் விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு பகுதிக்கு இடையே 12 அடி உயரம் கண்ணாடி தடுப்பு அருகில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது புறப்பாடு பகுதியில் இலங்கைக்கு செல்வதற்காக வந்த மற்றொரு ஆண் பயணியிடம், அவர் தனது கைப்பையில் இருந்து பந்து போன்ற உருண்டைகளை கண்ணாடி தடுப்பை தாண்டி, புறப்பாடு பகுதிக்குள் வீசினார். இலங்கை பயணி, அதை கேட்ச் பிடித்து சிறிது தூரத்தில் நின்ற, விமான நிலைய கிரவுண்ட் ஸ்டாப் ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்தார்.

இதனை ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், 3 பேரையும் மடக்கிப்பிடித்து, தனி அறைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடம் இருந்த பந்துகளை உடைத்துப் பார்த்தபோது, அதனுள் 2.2 கிலோ அளவிலான தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.75 கோடி. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் 3 பேரையும் கைது செய்து, தங்கப் பசையையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், விமான நிலைய கிரவுண்ட் ஸ்டாப், இந்த தங்கப் பசை பந்துகளை, தனது உள்ளாடைகளுக்குள் மறைத்து வெளியே எடுத்துச்சென்று, விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில், தயாராக நிற்கும் மற்றொரு நபரிடம் கொடுப்பார். அந்த நபர் அந்த தங்கப் பசை பந்துகளை, சென்னை நகருக்குள் கொண்டு செல்வார். அவர்தான் இந்த கும்பலுக்கு தலைவன் என்றும் தெரியவந்தது.

ஆனால் அவர்கள் இருவரும், இவர்கள் 3 பேரும் சிக்கிக் கொண்டனர் என்ற தகவல் தெரிந்ததும் தப்பி ஓடிவிட்டனர். எனவே மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், தப்பி ஓடிய கும்பலின் தலைவன் உட்பட 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கிரவுண்ட் ஸ்டாப் உட்பட கடத்தல் குருவிகளான 2 பயணிகள் ஆகிய 3 பேரையும், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே, கடத்தலில் கைதான கிரவுண்ட் ஸ்டாப் மற்றும் கடத்தல் குருவி ஒருவர் ஆகிய இருவரும், புது மாப்பிள்ளைகள் என்றும், அவர்களுக்கு ஜனவரி மாதம் நடைபெறும் திருமண விழா செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறினர்.

 

MUST READ