spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமூத்த வழக்கறிஞருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… உச்ச கட்ட கோபத்தில் பார் அசோசியேசன்…

மூத்த வழக்கறிஞருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… உச்ச கட்ட கோபத்தில் பார் அசோசியேசன்…

-

- Advertisement -

மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மெட்ராஸ் பார் அசோசியேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மூத்த வழக்கறிஞருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… உச்ச கட்ட கோபத்தில் பார் அசோசியேசன்…மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர் அளித்த சட்ட ஆலோசனைக்காக அமலாக்க இயக்குநரகம் அவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. இதனால் கடும் கண்டனம் எழுந்த நிலையில், அதை திரும்ப பெற்றுக் கொண்டது. அமலாக்கத்துறையின் இந்த செயலுக்கு சென்னை பார் அசோசியேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், ”வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்க மாட்டார்கள் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்துள்ளதை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கறிஞர்கள் தங்கள் தொழில் ரீதியாக கட்சிகாரர்களை சந்திப்பதற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க அழைப்பது சட்டம் அமைப்பின் செயல்பாடுகளை முடக்கும் செயல் எனவும் வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை சுதந்திரமாகவும், அச்சமில்லாமலும் செய்வதற்கு அமலாக்கத்துறை இத்தகைய செயல்பாடுகள் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும் என நம்புவதாக மெட்ராஷ் பார் அசோசியேசன் கூறியுள்ளது.

ஆர்யாவின் நெருங்கிய நண்பர் வீட்டிலும் திடீர் சோதனை!

we-r-hiring

 

MUST READ