ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ்
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு திரும்பினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக கடந்த மாதம் 15ம் தேதி போரூர் தனியார் மருத்துவமனையில் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இளங்கோவன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் இளங்கோவன் உடல்நிலை சீரானதை அடுத்து அவர், இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.