Homeசெய்திகள்சென்னைமகன் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் மோசடியில் ஈடுபட்ட – தந்தை கைது

மகன் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் மோசடியில் ஈடுபட்ட – தந்தை கைது

-

- Advertisement -

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 48). இவரது மகன் எழும்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அந்த வகையில் பள்ளிக்கு சென்று வரும்போது பள்ளி முதல்வருடன் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.

மகன் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் மோசடியில் ஈடுபட்ட – தந்தை கைது

தான்  தி நகரில் டூரிஸ்ட் நிறுவனம் நடத்தி வருவதாகவும், வட மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா சொல்ல ஸ்பெஷல் பேக்கேஜ் உள்ளது எனவும் கூறியுள்ளார்.இதை உண்மை என நம்பிய பள்ளி முதல்வர் டோனி ராபர்ட்,  60 ஆசிரியர்களை பஞ்சாப் மற்றும் காஷ்மீருக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல, கடந்த 2023 அக்டோபர் மாதம் 19 லட்சம் ரூபாய் பாலாஜியின் வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். 2024 மே மாதம் சுற்றுலா செல்வதாக இருந்தது.

இந்த நிலையில் காஷ்மீர் தேர்தல் மற்றும் பாதுகாப்பு காரணங்களை காட்டி சுற்றுலாவை* பாலாஜி கேன்சல்* செய்தார். சில மாதங்கள் கழித்து சுற்றுலா செல்லலாம் என பள்ளி முதல்வரிடம் பாலாஜி உறுதி அளித்துள்ளார். ஆனால் சொன்னபடி செய்யவில்லை. இது பற்றி பள்ளி முதல்வர் தோனி ராபர்ட் விசாரித்தபோது, பாலாஜி மோசடி பேர்வழி என்பதும், தியாகராயநகரில் டூரிஸ்ட் அலுவலகம் வைத்திருப்பதாக கூறியதும் பொய் என தெரிய வந்தது.

இது தொடர்பாக பள்ளி முதல்வர் டோனி ராபர்ட் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். செல்வந்தரின் மகனான பாலாஜி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக பிசினஸ் செய்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்படவே,  பாண்டிச்சேரியில் வசிக்கும் தந்தையிடம் மாதந்தோறும் பணம் வாங்கி செலவழித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் மகன் படிக்கும் பள்ளி் நிர்வாகத்திடமே மோசடியில் ஈடுபட்டு பாலாஜி சிறை சென்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது

MUST READ