பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டையில் போலி மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது.எஸ்தர் என்பவர் நாசரத்பேட்டையில் அன்னை கிளினிக் என்ற பெயரில் ப்சியோதெரபி செய்வது போல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ள நிலையில், கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் படி திருவள்ளூர் மாவட்ட மருத்துவ துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதனை தொடர்ந்து பூந்தமல்லி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபு தலைமையிலான குழு நபர் ஒருவருக்கு வயிற்று வலி என அனுப்பி வைத்த நிலையில் அவருக்கு ஊசி போட முயன்ற போது போலி மருத்துவர் கையும் களவுமாக பிடிபட்டார். மருத்துவத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நசரத் பேட்டை போலீசார் எஸ்தரை கைது செய்து விசாரணை செய்தனர்.

மேலும் விசாரணையில் பிடிபட்ட எஸ்தர் என்ற பெண் 10 வது படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்ததும் இவரது கணவர் சார்லஸ் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கிளினிக்கிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.