spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதனியார் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து

தனியார் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து

-

- Advertisement -

சென்னை பூந்தமல்லி அருகே தனியார் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தனியார் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து

we-r-hiring

பூந்தமல்லி அடுத்த கோலப்பன்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமாக உள்ள குடோனில் ஆயில் மாற்று வீட்டு உபயோக பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்நிலைகள் நேற்றிரவு திடீரென அந்த குடோனில் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்தது.

தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் தீ மல மலவென பரவி அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனை எடுத்து அங்கு தங்கி இருந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.

 

தனியார் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து

பூந்தமல்லி, கிண்டி, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சந்திரபாபு நாயுடுவுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய ராதிகா சரத்குமார் (apcnewstamil.com)

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்களின் நாச வேலை காரணமா என வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ