Homeசெய்திகள்சென்னைஇஸ்லாமிய பெண்களுடன் விநாயகர் சிலை-அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ்

இஸ்லாமிய பெண்களுடன் விநாயகர் சிலை-அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ்

-

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமிய பெண்களுடன் பொது மக்களுக்கு விநாயகர் சிலை வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ்.

இஸ்லாமிய பெண்களுடன் விநாயகர் சிலை-அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ்சென்னை தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவில் அதிமுக வட சென்னை மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் பொதுமக்களுக்கு குடையுடன் கூடிய களிமண் விநாயகர் வழங்கினார்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ஒருவருக்கொருவர் வேறுபாடு இல்லாமல் அனைத்து விழாக்களிலும் பங்கேற்க வேண்டும்,என்பதை வலியுறுத்தும் விதமாக சேனி அம்மன் கோவில் தெருவில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் இஸ்லாமிய பெண்களை வைத்து பொதுமக்களுக்கு விநாயகர் சிலைகளை வழங்குவதாக அவர் கூறினார்.இதில் இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று விநாயகர் சிலையை பொதுமக்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

MUST READ