Homeசெய்திகள்சென்னைதமிழகத்தில் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று…140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த உத்தரவு…

தமிழகத்தில் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று…140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த உத்தரவு…

-

- Advertisement -

சென்னையில் கிளாண்டர்ஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குதிரை ஒன்று உயிரிழந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறை கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று…140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த உத்தரவு…

சென்னையில் கிளாண்டர்ஸ் (Glanders) தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, நகரில் உள்ள 140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் குதிரை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

we-r-hiring

பாதிக்கப்பட்ட குதிரையுடன் தொடர்பில் இருந்த பிற குதிரைகளையும் உடனடியாக தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நோய் பரவலை தடுக்கும் நோக்கில் சென்னையில் தீவிர சுகாதார கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிளாண்டர்ஸ் தொற்று என்பது குதிரை, கழுதை உள்ளிட்ட விலங்குகளில் காணப்படும் கடுமையான தொற்று நோயாகும். இது சில சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதால், இந்த விவகாரம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழந்ததை அடுத்து, மாநில சுகாதாரத் துறையும் கால்நடைத் துறையும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக குதிரைகள் பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, தொற்று பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் சென்னையில் விலங்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விபத்தில் கணவன் மற்றும் மகளை இழந்த பெண்ணுக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு…நீதிமன்றம் அதிரடி…

MUST READ