spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னை2026 இல் பாமக கூட்டணி ஆட்சி இருக்கும் ! சஸ்பென்ஸ் !! தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

2026 இல் பாமக கூட்டணி ஆட்சி இருக்கும் ! சஸ்பென்ஸ் !! தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

-

- Advertisement -

2026 இல் கூட்டணி ஆட்சி இருக்கும், அந்தக் கூட்டணியில் பாமக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2026 இல் கூட்டணி ஆட்சி இருக்கும் , யாருடன் பாமக கூட்டணி ? சஸ்பென்ஸ் !! - அன்புமணி ராமதாஸ்சென்னை கொரட்டூரில் ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
தமிழ்நாட்டில் பேட்மிட்டன் விளையாட்டுக்கு கூடுதலாக உள் விளையாட்டு அரங்குகள் வேண்டும். மற்ற மாநிலங்களில் அதிக அளவில் மாநில தலைநகரங்களில் உள் விளையாட்டு அரங்கங்கள் உள்ளது. ஆனால் சென்னையில் அரசு நடத்தும் பேட்மிட்டன் உள் விளையாட்டு அரங்கங்கள் இல்லை.

we-r-hiring

விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களுக்கு என் வேண்டுகோள் ஹைதராபாத், அஸ்ஸாம் போன்று பன்னாட்டு தரத்தில் சென்னையில் மிகப் பெரிய அளவில் பேட்மின்டன் உள் விளையாட்டு ஒன்றை கட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் , 2026 இல் கூட்டணி ஆட்சி அமையும் அந்த ஆட்சியில் பாமக இருக்கும் என்று கூறினார்.

யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சிரித்தபடியே நகர்ந்தார்.

மீண்டும் சீரியலுக்கு வரும் நடிகை கௌதமி!

MUST READ