spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவியாசர்பாடியில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம் - தலைநகர் மக்கள் இயக்கம்...

வியாசர்பாடியில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம் – தலைநகர் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ

-

- Advertisement -

தலைநகர் மக்கள் இயக்கம் சார்பாக தமிழக ஆளுநருக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம். வியாசர்பாடி அஞ்சல் நிலையத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும்  மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு. இனி இந்திய அரசாங்கம் அங்கீகரித்த படத்தை தான் பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் ஆளுநர் மாளிகை முற்றுகையிடுவோம் என கண்டனம்.

சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் தலைநகர் மக்கள் இயக்கம் சார்பில் ஆளுநருக்கு இந்திய அரசால்  அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளூர் படத்தை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

we-r-hiring

வியாசர்பாடியில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம் - தலைநகர் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோதலைநகர் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமையில் மகாகவி பாரதி நகரில் உள்ள வியாசர்பாடி அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு, மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் சேகுவாரா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் ஒன்றிணைந்து அஞ்சலகத்தில் விரைவு  தபால் மூலம் திருவள்ளுவர் படத்தை ஆளுநர் ரவிக்கு அனுப்பினார்.

இதனை அடுத்து செய்தியாளரிடம பேசிய தலைநகர் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ

தமிழ்நாட்டுக்கு இந்திய அரசினுடைய பிரதிநிதியாக வந்து உள்ள ஆளுநர் ஆர்.என். ரவி திருவள்ளுவர் தினத்தன்று திருவள்ளூர் சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் காவி உடுத்துகின்ற ருத்ராட்சம்  அணிந்திருக்கின்ற திருநீற பூசி இருக்கின்ற திருவள்ளூர் படத்தை தொடர்ந்து பயன்படுத்தியிருக்கிறார். இந்தியா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட  திருவள்ளுவர் படத்தை தான் ஆளுநர் ரவி பயன்படுத்த வேண்டும். இந்திய அரசினுடைய பிரதிநிதியாக தமிழ்நாட்டில் இருக்கின்ற அவர் ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக செயல்படுகிறார் என்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ செய்திருந்தால் கூட தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு உணர்த்துவதற்காக அவர் செய்யும் தவறை திருத்திக் கொள்வதற்காக இன்று வட சென்னையில் இருக்கின்ற அஞ்சலகத்தில் அனைத்து கட்சிகள் அமைப்புகள் சேர்ந்து ஆளுநர்  ரவிக்கு இந்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை அனுப்பி வைக்கின்றோம்.

இனிமேலாவது ஆர்.என். ரவி  அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை தான் பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆளுநர் மாளிகை நோக்கி திரும்பும் அதற்கு தக்க பாடம் கற்பிக்கும் என்று தெரிவித்தார்.

MUST READ