சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் தொலைத்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோனை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் விவேகானந்தன் பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயிலில் சென்றார். அங்கு இறங்கி பிளாட்பாரங்களை கடந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலில் ஏறினார்.
வேப்பம்பட்டு அருகே ரயில் சென்ற போது தன்னுடைய ரூ.50,000/- மதிப்புள்ள செல்போன் தொலைந்து போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பிறகு அவரது மகளின் செல்போனிலிருந்து ரயில்வே டோல் ஃப்ரீ(139) எண்ணுக்கு நடந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வில்லிவாக்கம் ஆர்.பி.எப் போலீசார் ரயில் தண்டவாளங்கள், பிளாட்பாரங்களில் தேடினர். வியாபாரிகள், பயணிகளிடமும் விசாரித்தனர். இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கீழே கிடந்ததாக இந்த போனை தன்னிடம் கொடுத்து விட்டு சென்றார் என ரயில்வே ஊழியர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அண்ணா நகரை சேர்ந்த விவேகானந்தனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு பின் அவரிடம் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு நன்றி தெரிவித்து விட்டு விவேகானந்தன் செல்போனை பெற்றுச் சென்றார்.
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…