- Advertisement -
ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23) சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி புரிந்து வருகிறார்.

இன்று காலை பெருங்களத்தூர் ரயில்வே கேட் அருகே செல்போனில் பேசியபடி சென்று தண்டவாளத்தை கடந்தபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கிவந்த அந்தியோதைய விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிரேதத்தை கைப்பற்றி தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இதுபோன்று வண்டலூர், பெருங்களத்தூர், இரும்புலியூர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் பெண்கள், இளைஞர்கள் இதுபோல் தடைசெய்யப்பட்ட ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது செல்போனில் பேசியப்படியும், பாட்டு கேட்டப்படியும் கடப்பதால் அப்பகுதியல் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.