spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - போரூர் வழித்தடத்தில் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவு

கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – போரூர் வழித்தடத்தில் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவு

-

- Advertisement -

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – போரூர் உயர்மட்ட வழித்தடத்தில் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் (C4-ECV01) தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக முடித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

metro-work

இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டதுஎன்றும், இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழே 2,255 அஸ்திவார தூண்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பணிகளுக்காக 24.45 கி.மீ நீளத்திற்கு பொதுபயன்பாட்டில் உள்ள உயர்மின் விநியோக கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலைத்தொடர்பு கேபிள்கள், மழைநீர் வடிகால் போன்ற பயன்பாடுகளை மாற்று வழியில் செயல்படுத்தப்பட்டதாகவும்,  1,200 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதை போன்ற முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வழித்தட தூண்கள் அமையவுள்ள இடங்களை மறுவடிவமைப்பு செய்யப்பட்டதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 1,500 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப் பாதையை நீர் விநியோகத்திற்கு இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக மாற்று வழியில் செயல்படுத்தப்பட்டதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொதுமேலாளர் அசோக் குமார், GC2-AEON நிறுவனத்தின் குழுத் தலைவர் முருகமூர்த்தி, L&T நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஜெயராமன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் பொதுஆலோசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

MUST READ