spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத்குமார் மின்சாரம் தாக்கி பலி

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத்குமார் மின்சாரம் தாக்கி பலி

-

- Advertisement -

திமுக முன்னாள் கவுன்சிலர் கனவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத்குமார் மின்சாரம் தாக்கி பலி-கொரட்டூர் போலீசார் விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத்குமார் மின்சாரம் தாக்கி பலி

சென்னை பாடி யாதவா தேர்வை சேர்ந்தவர் சம்பத்குமார்/57. இவர் திமுகவில் பல பொறுப்புகளை வகித்தவர். இவரது மனைவி அம்பத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக பணியாற்றியவர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

we-r-hiring

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி நடைபயணம் மேற்கொள்வது வழக்கமாகக் கொண்டிருந்தார். இன்று காலை திடீரென பெய்த மழையில் காரணமாக அருகில் உள்ள கம்பெனி வாசலில் ஒதுங்கியபோது அங்கு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.பின்னர் பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அங்கு வரும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத்குமார் மின்சாரம் தாக்கி பலி

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த கொரட்டூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக பிரமுகர் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சம்பத்குமார் என்பவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

MUST READ