பூவிருந்தவல்லியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளாா் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னை பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பந்தல் அமைக்கும் போது மின் கம்பியில் இரும்பு பைப் உரசியதால் மின்சாரம் பாய்ந்து பரத் (28) என்பவர் உயிரிழந்துள்ளார். ரஜினி 45, தென்னவன்(29) படுகாயம் அடைந்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் சென்னையில் விநாயகர் சிலை அமைக்க பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாதவரத்தில் பந்தல் அமைக்கும் போது பிரசாந்த் என்பவரும் உயிரிழந்துள்ளாா். இந்த சம்பவங்கள் அந்த பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய சாதனை காலை உணவுத் திட்டம்…செல்வப்பெருந்தகை புகழாரம்…