Homeசெய்திகள்சென்னைமளமளவென சரியும் மக்கள் தொகை -ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரை

மளமளவென சரியும் மக்கள் தொகை -ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரை

-

- Advertisement -

சென்னை ஐஐடியில் நடந்த விழாவில் உரையாற்றிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மக்கள் தொகை மேலாண்மையில் தென்னிந்திய மாநிலங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பின்னா் மாணவர்கள் தெலுங்கில் பேச வேண்டும் என்று கூறினாா்.

மளமளவென சரியும் மக்கள் தொகை -ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரை

மேலும், எந்த கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அதில் பாதி பேர் தெலுங்கு மாணவர்களாக இருப்பதை நினைத்து ஒரு இந்தியனாகவும், தெலுங்கனாகவும் பெருமைப்படுகிறேன். மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வட மாநிலத்தை சேர்ந்த அதிகமானோர் இங்கு வர நேரிடும். மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்தியாவிற்கு பெரும் பங்களிப்பை கொடுத்துள்ளது. நாம் வெளிநாட்டுக்கு செல்வது போல் வட மாநிலத்தோர் வந்து குடியேற வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளாா்.

இன்றைய காலகட்டத்தில் கம்ஃபோர்ட் ஜோனுக்கு சென்று விடுவதால், சிறந்த முறையில் திருமணம் செய்வதோடு மட்டுமல்லாமல், குழந்தை வேண்டாம் என்று கணவன் மனைவி இருவருமே முடிவு  செய்து, சம்பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதனால் மக்கள் தொகையில் குறைவான நிலைக்குச் செல்கிறோம்.

மக்கள் தொகை மேலாண்மையில் சரியாக இருந்தால், இனிவரும் நாட்களில் இந்தியர்கள் உலகத்தை ஆளுவார்கள்.

தொகுதி மறுவரையை குறித்து தென்மாநில குரலை எதிரொலித்த ஆந்திர முதலமைச்சர் பேசிய போது,

”தமிழ்நாடு கேரளா ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தின. தற்போதைய இந்த மாநிலங்களில் பிறப்பு சதவிகிதம் குறைந்துவிட்டன.  ஆனால் பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. குழந்தை பிறப்பு சதவீதமும் அங்கே அதிகமாக இருக்கின்றன.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதும் நமக்கு ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அந்த மாநிலங்களுக்கு அது ஒரு சாதகமாக உள்ளது, என்றார். ”

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு தென் மாநிலங்களுக்கு பாதிப்பு என்ற கருத்தை மறைமுகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாய்.. பாய்-னு சொல்றாங்க… இதெல்லாம் நியாயமா?…. ரஜினி, சூர்யா ரசிகர்களை வெளுத்து வாங்கிய சல்மான் கான்!

MUST READ