spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னை”ஆவடி ரூட்” பேனர் ஏந்தி ரூட் தலைகள் அராஜகம்… எச்சரித்த போலீசார்…

”ஆவடி ரூட்” பேனர் ஏந்தி ரூட் தலைகள் அராஜகம்… எச்சரித்த போலீசார்…

-

- Advertisement -

பச்சையப்பன் கல்லூரி இன்று திறக்கப்பட்ட நிலையில், ஆவடி ரூட் என்கிற பேனரோடு 20-க்கும் மேற்பட்ட பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.”ஆவடி ரூட்” பேனர் ஏந்தி ரூட் தலைகள் அராஜகம்… எச்சரித்த போலீசார்…தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டுதோறும் கல்லூரிகள் பருவ தேர்வுகள் முடிவு பெற்றதும்,  இரண்டாம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்கள், மூன்றாம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் சென்னை முக்கிய கல்லூரிகளான பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரிகள் திறக்கும் போது எல்லாம் மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதும், சண்டையிடவும் வழக்கமாக உள்ளது.

நேற்று, பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபடுவது போல் காட்சிகள் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அந்த பதிவு தொடர்பான காட்சிகள் குறித்து, போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி ரயில்வே நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.”ஆவடி ரூட்” பேனர் ஏந்தி ரூட் தலைகள் அராஜகம்… எச்சரித்த போலீசார்…இந்த நிலையில் பச்சையப்பன் கல்லூரி முன்பு மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதற்கும் சண்டையிடுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள பேருந்து நிலையம் ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பச்சையப்பன் கல்லூரிக்கு வரக்கூடிய மாணவர்கள் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் கல்லூரி வளகாத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவிக்க ஆவடி ரூட் என்கிற பேனரோடு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கேட்டில் மாலையில் கட்டப்பட்டு ஆவடி ரூட் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

we-r-hiring

அதனை தொடர்ந்து பேருந்தில் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கோஷம் போட்டுக் கொண்டு தாளம் போட்டுக் கொண்டு பேருந்தில் சென்றதால்,காவல்துறையினர் பேருந்தை நிறுத்தி அவர்களிடம் கோஷம் போடக்கூடாது என போலீசார் எச்சரித்தனர். மேலும் ரூட் தலைகளை கண்காணிக்கவும் அத்துமீறி மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதையும் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. பாதுகாப்பை மீறி அராஜகத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினா் எச்சரித்துள்ளனர்.

ஸ்டாலினின் பக்கா மூவ்! தூக்கம் தொலைத்த அமித்ஷா! பரிதாபத்தில் எடப்பாடி-விஜய்!

MUST READ