Homeசெய்திகள்சென்னைரூ. 2,820 கோடியில் 28 புதிய மெட்ரோ ரயில் வாங்க திட்டம்

ரூ. 2,820 கோடியில் 28 புதிய மெட்ரோ ரயில் வாங்க திட்டம்

-

- Advertisement -
kadalkanni

ரூ. 2,820 கோடியில் 28 புதிய மெட்ரோ ரயில் வாங்க திட்டம்சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 2,820 கோடி ரூபாய் மதிப்பில் 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் திருவொற்றியூர் விம்.கோ நகரிலிருந்து – விமான நிலையம் மற்றும் சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர். இருப்பினும் மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக வரும் காலங்களில் அதன் தேவை மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் தினசரி காலை 4:30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 45 ரயில்கள் இயக்கத்தில் உள்ளன.

இதற்காக மாநில அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில் அதிகரித்து வரும் தேவையை திறம்பட கையாளவும் வசதியான பயண அனுபவத்தை மக்களுக்கு வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

MUST READ