spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅரசு விழாவில் பங்கேற்று தமிழகத்துக்கான கோரிக்கையை முதலமைச்சர் வைத்திருக்கலாம் - தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து

அரசு விழாவில் பங்கேற்று தமிழகத்துக்கான கோரிக்கையை முதலமைச்சர் வைத்திருக்கலாம் – தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து

-

- Advertisement -

தமிழகத்துக்கு வந்த பிரதமரிடம் முதலமைச்சர் நேரில் சில கோரிக்கைகளை வைத்து இருக்கலாம் என பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து கூறியுள்ளார்.

அரசு விழாவில் பங்கேற்று தமிழகத்துக்கான கோரிக்கையை முதலமைச்சர் வைத்திருக்கலாம் - தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து

we-r-hiring

சென்னை வியாசர்பாடியில் பாஜக சார்பிலான தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் இருந்த இத்தனை காலங்களில், தற்போது தான் வடசென்னையின் வளர்ச்சி பற்றியே சிந்தித்துள்ளது என்றார்.

இந்த மண் இந்தியாவிற்கு எதிராக செயல்படாது என இலங்கை அதிபர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய தமிழிசை, காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்று உத்தரவாத்தை ஏன் வாங்கவில்லை என வினவினார். பிரதமர் வந்த அரசு விழாவில் பங்கேற்று தமிழகத்துக்கான கோரிக்கையை முதலமைச்சர் வைத்திருக்கலாம் என அவர் கருத்துத் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் பிரச்சனையை பேசும் முதலமைச்சர், காசிமேடு மீனவர்களுக்கான டீசல் உள்ளிட்ட பிரச்சனைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழிசை கேட்டுக் கொண்டார்.

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு விவகாரம்-முன்ஜாமீனை நீடித்தது சென்னை உயா்நீதிமன்றம்

MUST READ