தமிழகத்தில் 42 சதவீகித பெண்கள் உற்பத்தி பிரிவில் பணியாற்றி வருவதாக வெளியாகி உள்ள புள்ளி விபரங்கள் தமிழகம் பெருமைபட வேண்டிய ஒன்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி.

மதுரை மகபூப்பாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த தையற் தொழில்கூடத்தில் ஓராண்டு தையல் தொழில் முனைவோர் பயிற்சியினை நிறைவு செய்த மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த மகளிர் 11 பேருக்கு தனித்து தையல் தொழில் செய்வதற்கு இலவசமாக நவீன தையல் இயந்திரத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
நீதி கட்சி ஆட்சியிலிருந்து கல்வியில் சொத்தில் பெண்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கி கொண்டு இருக்கிறோம்.தமிழக அரசின் இலக்கு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகும். சமீபத்தில் வெளி வந்துள்ள புள்ளி விபரப்படி இந்தியாவில் உற்பத்தி பிரிவில் பணி செய்யும் பெண்களில் 42% பேர் தமிழகத்தில் உள்ளனர்.இது தமிழகம் பெருமைப்பட வேண்டிய ஒன்று.
அதன் தொடர்ச்சியாக என்னுடைய தொகுதியில் சுயஉதவி குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது.தொழில் கற்று கொடுப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருகிறோம். இங்கு தையல் பயிற்சியும் அதன் முலம் உற்பத்தி செய்யப்படும் துணிகளை விற்பனை செய்து தருகிறோம்.இதில் தொடர்ந்து 6மாதங்கள் பயிற்சி எடுத்தால் மட்டும் தான் பணி செய்யும் திறன் பெறுகிறார்கள்.இதனை பல இடங்களில் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.