Homeசெய்திகள்சென்னைஆவடி அருகே பெண்கள் நூதன போராட்டம்

ஆவடி அருகே பெண்கள் நூதன போராட்டம்

-

- Advertisement -
ஆவடி அருகே பெண்கள் நூதன போராட்டம்
மதுபான கடை

டாஸ்மாக் கடை முன்பு மது பாட்டிலை உடைத்து பெண்கள் நூதன போராட்டம் செய்தனர்.

ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் அடுத்தடுத்த இரண்டு டாஸ்மாக் கடையால் ரயில் பயணிகள் மற்றும் பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆவடி அருகே பெண்கள் நூதன போராட்டம்
மது பாட்டிலை உடைத்த பெண்கள்

பள்ளி கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்க கூடிய பிரதான சாலையில் செயல்படும் மதுபான கடையை அகற்ற பல்வேறு மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காததை அடுத்து பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆவடி அருகே பெண்கள் நூதன போராட்டம்
பெண்கள் போராட்டம்

தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆளுக்கு ஒரு மதுபானத்தை வாங்கி கடை முன்பு உடைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஆர்ப்பாட்டத்திற்கு பின் உடைத்த பாட்டில்களை சேகரித்து அப்புறப்படுத்தி சென்றனர்.

MUST READ