நடிகர் அஜித், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற அதைத் தொடர்ந்து அஜித் தனது 62வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்க ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து வருகிறார்கள். ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கடந்து சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 16 அன்றைய தினத்துடன் விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இருப்பினும் படமானது தீபாவளிக்கு ரிலீஸாகி விடுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று விடாமுயற்சி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அல்லது டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
சுதந்திர தினத்தன்று அஜித் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்….. ‘விடாமுயற்சி’ லேட்டஸ்ட் அப்டேட்!
-
- Advertisement -