- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப், நடிகர் விஜய்சேதுபதியின் வயதை கூகுள் செய்து பார்ததாக கூறியிருக்கிறார். இதற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

ஜவான் படம், காந்தி டாக்ஸ் தொடருக்கு பிறகு நடிகர் விஜய்சேதுபதி பாலிவுட்டில் அடுத்து நடித்துள்ள திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். கத்ரினா கைஃப்புடன் இணைந்து விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்துள்ளார். இதனால், இத்திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ளது.


‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரித்து உள்ளார். ஸ்ரீராம் ராகவன் படத்தை இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் ஆகியோரும் நடித்து உள்ளனர். இது தவிர தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு, ராஜேஷ் வில்லயம்ஸ் ஆகியோரும் நடித்து உள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இந்தி மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் நடித்துள்ளார்.



