Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனை அடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்!

சிவகார்த்திகேயனை அடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்!

-

நடிகை அதிதி ஷங்கர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் முக்கியமானவர் விஷ்ணு விஷால். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர் குள்ளநரி கூட்டம், முண்டாசுபட்டி, ஜீவா உள்ளிட்ட படங்களின் மூலம் மக்களின் மனம் வென்றார்.

அதையடுத்து ராம்குமார் இயக்கத்தில் நடித்த ‘ராட்சசன்‘ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் அந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து ராட்சசன் இயக்குனர் ராம் குமார் உடன் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர் தற்போது சிவகார்த்திகேயன் உடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை அடுத்து விஷ்ணு விஷால் படத்தில் அவர் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ