Homeசெய்திகள்சினிமாரேஸிங்கில் வெற்றி பெற்ற அஜித்..... திரைப்பிரபலங்கள் வாழ்த்து!

ரேஸிங்கில் வெற்றி பெற்ற அஜித்….. திரைப்பிரபலங்கள் வாழ்த்து!

-

- Advertisement -

நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வந்தாலும் சிறுவயதிலிருந்தே பைக், கார் பந்தயங்களிலும் ஆர்வம் காட்டி வந்தார். ரேஸிங்கில் வெற்றி பெற்ற அஜித்..... திரைப்பிரபலங்கள் வாழ்த்து!அந்த வகையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24H தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாம் இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றியை நடிகர் அஜித் தேசியக்கொடியை கையில் வைத்து அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைக் கண்ட ரசிகர்கள் அஜித்தின் வெற்றியை தங்களின் வெற்றியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். லவ் யூ சார். நாங்கள் அனைவரும் உங்களால் பெருமை அடைகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிரசன்னா, “இதை பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது. கனவுகளுடன் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்துள்ளீர்கள் அஜித் சார். அடுத்து வரும் பந்தயத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நடிகர் நாக சைதன்யா, “அஜித் சார் என்ன ஒரு பயணம் என்ன ஒரு வெற்றி. எங்களை பெருமைப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்” என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில், “உங்களின் விடாமுயற்சிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் அஜித் சார். பெருமைப்படும் தருணம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நம் தேசத்திற்கு பெருமை சேர்க்கும் உங்களுடைய வெற்றி தொடரட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு, “நீங்கள் உங்கள் ஆர்வத்தை பின்பற்றி அதிலும் வெற்றி கண்டுள்ளீர்கள். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், “அஜித் சார் மற்றும் அவரது அணியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது ஊக்கமளிக்கும் சாதனை” என்று அஜித்தை வாழ்த்தியுள்ளார்.

நடிகர் சாந்தனு தனது சமூக வலைதள பக்கத்தில், “அஜித் சாருக்கு வாழ்த்துக்கள். கனவுகளை நோக்கி போடும் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளித்துள்ளீர்கள். அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என்று வாழ்த்தியுள்ளார்.

MUST READ