Homeசெய்திகள்சினிமாநான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை... நடிகர் அல்லு அர்ஜூன் விளக்கம்... நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை… நடிகர் அல்லு அர்ஜூன் விளக்கம்…
- Advertisement -
நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜூன் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வௌியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தான நடித்திருப்பார். சுனில், ஃபகத் பாசில், பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருந்தனர். தேவி 2 பிரசாத் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது, புஷ்பா தி ரூல் என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்திலும் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிக்கின்றனர். மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆந்திரா தேர்தலின்போது, முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜூன் பரப்புரையில் ஈடுபட்டது பேசு பொருளாக மாறியது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அல்லு அர்ஜூன், தனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை, நடுநிலையாக மக்கள் பக்கம் நிற்பதாக தெரிவித்துள்ளார். தனது நண்பர் ஷில்பா ரவி ரெட்டி கேட்டுக்கொண்டதற்காக அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாக கூறினார்.