அமரன் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அமரன் திரைப்படமானது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். ராணுவத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே காஷ்மீர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. அதை கடந்து டப்பிங் பணிகளும் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
#HeyMinnale! Lighting hearts on October 4th. #GVPrakash700thSong#Amaran#AmaranDiwali #AmaranOctober31#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
A Film By @Rajkumar_KP@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @gvprakash @anbariv… pic.twitter.com/MbWURGFJVo
— Raaj Kamal Films International (@RKFI) October 2, 2024
அதன்படி படமானது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது இந்த படத்திலிருந்து ஹே மின்னலே எனும் முதல் பாடல் வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த பாடல் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவருக்கும் இடையிலான காதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.