அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடித்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் மிஸ் ஒருத்தி எனும் பாடல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமான அர்ஜுன் தாஸ் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிபடங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ரசவாதி எனும் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அர்ஜுன் தாஸ், ஒன்ஸ் மோர் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைகளத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இதனை விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்க மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹேசம் அப்துல் வாகப் இசையமைத்திருக்கிறார். அரவிந்த விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது.
அதன்படி படப்பிடிப்புகளும் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மிஸ் ஒருத்தி எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை நரேஷ் ஐயர் பாடியுள்ளார். இந்த பாடல் வரிகளை விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.