Homeசெய்திகள்சினிமாசாதாரண பகை இல்ல 200 வருஷ பகை..... 'சந்திரமுகி 2' மிரட்டலான டிரைலர் வெளியானது!

சாதாரண பகை இல்ல 200 வருஷ பகை….. ‘சந்திரமுகி 2’ மிரட்டலான டிரைலர் வெளியானது!

-

சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி வாசு இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், லட்சுமிமேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. எம் எம் கீரவாணி இதற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதேசமயம் வேட்டையின் ராஜாவாக நடித்துள்ள ராகவா லாரன்ஸ் மற்றும் சந்திரமுகியாக நடித்துள்ள கங்கனா ரணாவத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரின் மூலம் வடிவேலு முதல் பாகத்தில் நடித்திருந்த முருகேசன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சந்திரமுகி முதல் பாகத்தில் தொடர்ச்சியாக 17 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களின் பின்னணியை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது சந்திரமுகி 2 ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் சந்திரமுகி 2 வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ