லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். அதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தை இயக்கி பெயர் பெற்றார். அதே சமயம் இவர், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் பல படங்களை இயக்கி கவனம் பெற்று வருகிறார். அந்த வகையில் இவருடைய கைதி படத்தை தொடர்ந்து விக்ரம், லியோ போன்ற படங்கள் LCU விற்கு கீழ் அடங்கும். அதைத் தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2, லியோ 2 போன்ற படங்களையும் இயக்க திட்டமிட்டுள்ளார்.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கயிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் வலம் வரும் நிலையில் சமீபத்தில் இனிமேல் என்ற ஆல்பம் மூலம் நடிகராகவும் உருவெடுத்தார். இவ்வாறு தொடர்ந்து பிசியாக பணியாற்றி வரும் லோகேஷ் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை கோவிலில் தரிசனம் செய்துள்ளார். லோகேஷ் உடன் இணைந்து லோகேஷின் உதவி இயக்குனர், கதாசிரியர் ரத்னகுமாரும் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.