Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகர் துவாரகீஷ் மரணம்..... ரஜினிகாந்த் இரங்கல்!

பிரபல நடிகர் துவாரகீஷ் மரணம்….. ரஜினிகாந்த் இரங்கல்!

-

- Advertisement -

பிரபல கன்னட நடிகர் துவாரகீஷ் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் துவாரகீஷ் மரணம்..... ரஜினிகாந்த் இரங்கல்!

துவாரகீஷ் கடந்தை 1964இல் வெளியான வீர சங்கல்பா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கிய துவாரகீஷ் அதைத்தொடர்ந்து தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் உருவெடுத்தார். அந்த வகையில் துவாரகீஷ் தனது சித்ரா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக இவருடைய மேயர் முத்தண்ணா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் 81 வயது நிரம்பிய இவர் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வாழ்ந்து வந்தார். அப்போது இவர் திடீரெனம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர். பிரபல நடிகர் துவாரகீஷ் மரணம்..... ரஜினிகாந்த் இரங்கல்!இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் துவாரகீஷ் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். “காமெடி நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கி பெரிய தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் தன்னை உயர்த்திக்கொண்டவர் துவாரகீஷ். என்னுடைய நீண்ட நாள் நண்பராக இருந்த துவாரகீஷ் மறைவு மிகுந்த வேதனையை தருகிறது. அவருடன் பழகிய நினைவுகள் என் நினைவுக்கு வந்து செல்கின்றன. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

MUST READ