Homeசெய்திகள்சினிமாதிருவண்ணாமலை கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

திருவண்ணாமலை கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

-

- Advertisement -
kadalkanni
தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கும், ஏன் இந்திய மொழிகளுக்கு கூட முடி சூட மன்னனாக விளங்குகிறார் இளையராஜா. முதியோர்கள் மட்டுமல்ல, இன்றைய இளைய சமுதாயமும் இவரது பாடல்களுக்கும், இசைக்கும் அடிமை என்று சொல்வதே நிதர்சனம்.

தற்போதும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி இசை அமைத்து வருகிறார். அண்மையில் அவரது இசையில் வெளியான திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் சூரி நடிக்கிறார். தற்போது விடுதலை 2-ம் பாகத்திற்கு இசை அமைத்து வருகிறார். இதனிடையே, இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவும் உருவாகிறது. இதில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். இதனிடையே இளையராஜா அடுத்தடுத்து புகார்கள் அளித்து வந்த வண்ணமே உள்ளார். அவர் மீது பலரும் தங்களின் வேதனையை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வைகாசி மாத அமாவாசையை ஒட்டி திருவண்ணாமலை கோயிலில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, கோயிலின் அறங்காவலர் குழு சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. இளையராஜாவை கண்ட பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

MUST READ