spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கூலி' படத்தில் இணையும் கமல் பட நடிகை!

‘கூலி’ படத்தில் இணையும் கமல் பட நடிகை!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் கடைசியாக விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்க உள்ளார். 'கூலி' படத்தில் இணையும் கமல் பட நடிகை!இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜூன் மாதம் 10ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ரஜினியின் 171-வது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதேசமயம் படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட் வரும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சாண்டி மாஸ்டர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக சமீப காலமாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் இந்த படத்தின் ரஜினிக்கு ஜோடியாக தளபதி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த ஷோபனா நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், ரஜினிக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடிக்க உள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. 'கூலி' படத்தில் இணையும் கமல் பட நடிகை!நடிகை அபிராமி தமிழுடன் இணைந்து விருமாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் பல படங்களில் நடித்துள்ள நடிகை அபிராமி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மகாராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக தக் லைஃப் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ