Homeசெய்திகள்சினிமாஅஜித்தின் 'AK 64' படம் குறித்த புதிய தகவல்!

அஜித்தின் ‘AK 64’ படம் குறித்த புதிய தகவல்!

-

- Advertisement -

அஜித்தின் AK 64 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.அஜித்தின் 'AK 64' படம் குறித்த புதிய தகவல்!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள அஜித் ,சமீபத்தில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 6 அன்று உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அடுத்தது 2025 ஏப்ரல் 10ஆம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து அஜித்தின் 64வது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி பிரசாந்த் நீல், சிறுத்தை சிவா ஆகியோரின் பெயர்கள் லிஸ்டில் இருக்கிறது. அஜித்தின் 'AK 64' படம் குறித்த புதிய தகவல்!ஆனால் சமீப காலமாக AK 64 திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கப் போவதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. அதே சமயம் தற்போது கிடைத்த கூடுத தகவல் என்னவென்றால், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ