லப்பர் பந்து படக்குழுவினர் கேப்டன் விஜயகாந்தின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் லப்பர் பந்து. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அட்டகத்தி தினேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சஞ்சனா, தேவதர்ஷினி, காளி வெங்கட், சுவாசிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. மேலும் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்தின் குறியீடுகள் பல இடங்களில் காண்பிக்கப்பட்டது. இதனை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். அதாவது நடிகர் அட்டகத்தி தினேஷ் தீவிர விஜய்காந்தின் ரசிகராக நடித்திருப்பார். அவருக்கு பில்டப் கொடுக்கும் விதமாக விஜயகாந்தின் பொன்மனச் செல்வன் படத்திலிருந்து ‘நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம்’ எனும் பாடலை இப்படத்தில் ஒலிக்கச் செய்துள்ளனர். இந்தப் பாடல் வரும் இடங்களில் ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது.
Team #LubberPandhu pays tribute to the legendary #CaptainVijaykanth at his office and met his family.
We salute you, Captain.
Produced by @lakku76 and
Co-produced by @venkatavmedia. @Prince_Pictures @iamharishkalyan #AttakathiDinesh @tamizh018 @isanjkayy #Swasika @kaaliactor… pic.twitter.com/1iIRLDnBlx— Prince Pictures (@Prince_Pictures) September 26, 2024

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட லப்பர் பந்து படக்குழுவினர் தேமுதிக அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள விஜயகாந்தின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அத்துடன் விஜயகாந்தின் குடும்பத்தினருக்கும் தங்களின் நன்றிகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


